மன அலையின் கூச்சல்

 

கடல் அலை போலே மனம்,

கரை தெரியா பயணம்.

“எங்கே நிம்மதி?” என

இதயம் ஏங்கிக் கேட்கும்.

பொருள் வேட்டையின் ஓட்டம்,

பொன் மணல் வாழ்வின் நாட்டம்.

நிம்மதி இங்கே இல்லை,

உண்மை வேறு இல்லை.

சுகம் தேடி பறக்கிறோம்,

வானைத் தொட முயல்கிறோம்.

அங்கேயும் அது இல்லை,

பொய்யின் மயக்கம்தான்!

அலைபாயும் மனதிலே,

நிம்மதி எங்கே?

அலைமோதும் வாழ்விலே,

அமைதி எங்கே?

பொருள், புகழ், வெற்றி —

எதிலும் நிம்மதி இல்லை.

எண்ணங்களின் நீண்ட வரிசை,

நினைவுகள், கனவுகள், காதல், மோதல்கள்…

மனதை கிளறும்!

வெறுமை நுழையும் நொடியில்,

அமைதி பிறக்கும்!

உள்ளே தேடு,

மௌனத்தைக் கேள் —

அங்கேதான் நிம்மதி!

உண்மை வெளிச்சமதுவே!

உள்ளுக்குள்ளே தேடு,

அன்புடன் பகிர்,

அமைதி பிறக்கும்.

அன்பில் வாழ்,

கருணையில் தேன்!

அங்குதான் நிம்மதி,

ஆனந்தமாய்!

கவலைகளை கழற்றி விடு,

அமைதி தோன்றும்.

கருணையுடன் வாழ்ந்திடு,

அமைதி ஊறும் —

அதுவே நிரந்தர நிம்மதி!

 

GK. Balasubramani

Senior Physiotherapist, Salem

Kauvery Hospital