Volume 4 - Issue 4
"சமத்துவம்" என்பதே மருத்துவத்திலிருந்து தோன்றியது தானோ என்னவோ?
இனம் என்ன? குலமென்ன? குணமென்ன? தேவையில்லை! உயர்வு, தாழ்வு என்று ஏதுமில்லை!
நோயென்று நாடி வருவோரை, தாய் என காத்து, பயத்துடன் ஓடி வருவோரை, நயத்துடன் சிகிச்சை பார்த்து, நம்பி கை நீட்டுவோரை , நம்பிக்கை கொள்ள வைத்து,
மாத்திரைகளுடன் அன்பு வார்த்தைகள் பேசி, வலி தெரியாமல் போட்டு, 'ஊசி',
அப்பப்பா! இன்னும் என்னென்ன சொல்ல?
கண்ணுக்குத் தெரியாதவன் அந்த 'இறைவன்' ! கண் கண்ட தெய்வமாம், மருத்துவம் பார்க்கும் இந்த 'புனிதன்'.!
அதுவும் இந்தக் ' கொடிய கொரானா' காலத்தில்?
கால நேரம் பாராமல், காலனை எதிர்த்து மனம் சோராமல்,
மனித இனத்தை காக்க, நோய் ஏதிர்ப்பு சக்தியை அவர் உடம்பில் சேர்க்க,
அரும்பாடு பட்டனர், சிலர் தம் உடல் நலமே கெட்டனர்.
துன்பம் அல்ல ஒரு பொருட்டு , விலக வேண்டும் கொரானா எனும் ' கொடிய இருட்டு'.
என அயராது பணியாற்றுகிறீர்கள்,
மகத்தான உம் சேவையை என்ன சொல்லி வாழ்த்த ?
வேண்டுகிறோம் இறைவனை பணிவோடு, விரைவில் வந்து விடுவார் கனிவோடு, மென்மேலும் உம்மை உயர்த்த அருளோடு!.
"வாழ்க மருத்துவ பணி வளர்க காவேரியின் பணி"
Balasubramani Physiotherapist, Kauvery Hospital, Salem
Back
LOCATE US